சுடச்சுட

  

  முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு பிறந்த நாள் விழா அரியலூரில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

  அரியலூர் நகர, வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சீனி. பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

  இதில் கூட்டுறவு பால் சங்கத்தின் முன்னாள் தலைவர் பன்னீர்செல்வம், தேசிய தொழிலாளர் சங்கத் தலைவர் மா.மு. சிவகுமார், நகரப் பொறுப்பாளர் ஏபிஎஸ் பழனிச்சாமி, நகரப் பொருளாளர் த. செந்தில்குமார், முன்னாள் மாவட்டச் செயலாளர் கர்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று, பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai