சுடச்சுட

    

    உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான விழிப்புணர்வு பயிற்சி

    By அரியலூர்  |   Published on : 15th November 2014 02:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் சமூக தணிக்கை தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.இதில் ஆட்சியர் பேசியது:

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்துக்கு நிதியாண்டில் 100 நாள்கள் வேலை கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    18 வயது நிரம்பியவர்களுக்கு வேலை கொடுக்க பதிவு செய்து கொண்டு அடையாள அட்டை வழங்கி 15 நாள்களில் வேலை கொடுக்க வேண்டும்.

    இப்பணிகளை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு உள்ளது. கடந்த நிதியாண்டில் இத்திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் நீர் நிலைகளை ஆழப்படுத்துதல், வாய்க்கால், கால்வாய்களை ஆழப்படுத்துதல், சாலைப் பணிகள், பண்ணைக்குட்டைகள் அமைத்தல், மரக்கன்றுகள் நடுதல், கிராம ஊராட்சி சேவை மையம், வட்டார ஊராட்சி சேவை மையங்கள், ஊரக சுகாதாரப் பணிகள் போன்ற பல்வேறு பணிகள் ரூ. 111 கோடியே 34 லட்சம் மதிப்பில் நடைபெற்றுள்ளது என்றார் ஆட்சியர். இந்நிகழ்ச்சியில், மண்டல ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் முதல்வர் மற்றும் இணை இயக்குநர் அம்மையப்பன் வரவேற்றார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சடையப்ப விநாயகமூர்த்தி, மாவட்ட ஊராட்சித் தலைவர் தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பவானிசாகர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் கே. சபாபதி, கே. மாணிக்கம் ஆகியோர் பயிற்சி வகுப்புகளை நடத்தினர்.

    உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அலுவலர்கள் கலந்துகொண்டனர். முடிவில் ஊராட்சி உதவி இயக்குநர் எஸ். கங்காதாரிணி நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai