சுடச்சுட

  

  ஜயங்கொண்டம் அருகேயுள்ள பாப்பாகுடி பகுதியில் திங்கள்கிழமை (நவ. 17) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆண்டிமடம் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக செயற்பொறியாளர் ஏ.வின்சென்ட்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பாப்பாகுடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான பாப்பாகுடி, மேலனிகுழி, காடுவெட்டி, மீன்சுருட்டி, சலுப்பை, சத்திரம், அவகர்கோவில், வெட்டியார்வெட்டு, பிள்ளைபாளையம், குலோத்துங்கநல்லூர், தென்னவநல்லூர், வேம்புகுடி, வங்குடி, அய்யப்பநாயக்கன்பேட்டை, திருக்களப்பூர், கோவில்வாழ்க்கை, நெட்டலகுறிச்சி, வீரசோழபுரம் ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai