சுடச்சுட

  

  மாவட்ட வழங்கல் அலுவலர் உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு

  By அரியலூர்  |   Published on : 15th November 2014 02:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட விவகாரத்தில் கொலை மிரட்டல் விடுத்ததாக மாவட்ட வழங்கல் அலுவலர் உள்ளிட்ட 6 பேர் மீது போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

  அரியலூர் அருகேயுள்ள மண்ணுழி கிராமத்தைச் சேர்ந்தவர் பொய்யாமொழி (35), விவசாயி.

  கடந்த 2012 ஆம் ஆண்டில் இவர் வீட்டின் முன் இருந்த சுவர் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருந்ததால் ஆக்கிரமிப்பு அகற்றத்தின்போது இடிக்கப்பட்டது. இதை எதிர்த்து பொய்யாமொழி அரியலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். இந்நிலையில், அப்போதைய வட்டாட்சியராக இருந்தவரும், தற்போதைய தருமபுரி மாவட்ட வழங்கல் அலுவலருமான முத்துவடிவேல், தேளூர் ஊராட்சி மன்றத் தலைவர் கருணாநிதி, துணை வட்டாட்சியர் சந்திரசேகரன், செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், ஊராட்சி எழுத்தர் அசோக்குமார் மற்றும் மண்ணுழி கிராமத்தைச் சேர்ந்த அழகுதுரை ஆகியோர் பொய்யாமொழியை திட்டி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து பொய்யாமொழி அளித்த புகாரின்பேரில், கயர்லாபாத் காவல் நிலைய ஆய்வாளர் ரத்தினசாமி வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai