சுடச்சுட

  

  திருச்சியில் மே 18-ல் தமிழர் வாழ்வுரிமை மீட்பு மாநாடு: சீமான்

  By அரியலூர்,  |   Published on : 16th November 2014 12:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருச்சியில் அடுத்த ஆண்டு மே 18-ம் தேதி தமிழர் வாழ்வுரிமை மீட்பு மாநாடு நடைபெறவுள்ளது என்றார் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான்.

  அரியலூரில் கட்சியின் மாவட்டச் செயலர் வழக்குரைஞர் முத்துக்குமரன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது: உலகத்துக்கே பாரம்பரியம், பண்பாடு கற்றுக் கொடுத்தவர்கள் தமிழர்கள். ஆனால், இன்று அவர்கள் தங்களது அடையாளத்தைத் தொலைத்து வருகிறார்கள். கனிமொழிக்கு தத்தெடுக்க தூத்துக்குடியில்தான் கிராமம் கிடைத்ததா, தமிழ்நாட்டில் வேறு கிராமமே இல்லையா?. அதற்கு காரணம் ஜாதி. ஜாதி அரசியலால்தான் தமிழன் சீரழிகிறான்.

  திராவிடக் கட்சிகளால் இந்த மண்ணில் குவிந்துள்ள குப்பைகளை கூட்டித் தள்ள வேண்டும். அதற்கு அரை நூற்றாண்டு ஆகும். தேசிய, திராவிடக் கட்சிகளுக்கு மாற்று நாம் தமிழர் கட்சிதான்.

  தமிழர்கள் இழந்து வரும் உரிமைகளை மீட்டெடுக்க திருச்சியில் கட்சி சார்பில் வரும் மே 18-ல் தமிழர் வாழ்வுரிமை மீட்பு மாநாடு நடைபெறுகிறது என்றார் அவர்.

  கூட்டத்தில் தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பாளர் நல்லதுரை, குடந்தை மணிசெந்தில், அரியலூர் மாவட்டத் தலைவர் குமார், ஒன்றியச் செயலர் ராமகிருஷ்ணன் (திருமானூர்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai