சுடச்சுட

    

    அரியலூர் ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளிக் குழந்தைகள் 100 பேருக்கு சீருடைகள் அண்மையில் வழங்கப்பட்டன.

    அரியலூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் துணை ஆளுநர் பி. தண்டபாணி தலைமை வகித்தார்.

    உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கோ.விஜயலெட்சுமி சிறப்பு விருந்தினராக பேசினார். ரோட்டரி தலைவர் சின்னப்பன், செயலர் கதிரவன், பொருளாளர் ராமராஜ், கோவை கிருஷ்ணா அமுதன், சுதாகர், பாலசுந்தரம் உள்ளிட்டோர் பேசினர். தலைமை ஆசிரியர் சண்முகம் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai