சுடச்சுட

  

  தா. பழூரில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு சமூக தணிக்கைப் பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது.

  அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியத்தில் 33 ஊராட்சிகளிலுள்ள ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு வேலை உறுதித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணி தொடர்பான சமூக தணிக்கை குறித்த பயிற்சி காரைக்குறிச்சியில் அளிக்கப்பட்டது.

  ஒன்றிய ஆணையர் கோபு தலைமை வகித்தார். ஈரோடு மாவட்டம், பவானிசாகர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் சபாபதி, மாணிக்கம் ஆகியோர் பயிற்சி வகுப்பை நடத்தினர். ஊராட்சிகள் உதவி இயக்குநர் பிரேமாவதி முன்னிலை வகித்தார். இப்பயிற்சியில் நீர்நிலைகளை ஆழப்படுத்துதல், வாய்க்கால் கால்வாய்களை ஆழப்படுத்துதல், சாலைப் பணி, பண்ணைக்குட்டை அமைத்தல், மரக்கன்றுகளை நடுதல் கிராம ஊராட்சி சேவை மையம், வட்டார ஊராட்சி சேவை மையங்கள், ஊரக சுகாதார பணிகள் போன்ற பல்வேறு பணிகள் தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்டது.துணை ஆணையர்கள் மலர்கண்ணன், பிரபாகரன், மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒன்றிய ஆணையர் ராஜா நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai