Enable Javscript for better performance
சிறப்பு முகாமில் 108 மனுக்களுக்கு தீர்வு- Dinamani

சுடச்சுட

    

    திருமானூரில் நடைபெற்ற அம்மா திட்ட சிறப்பு முகாமில் 108 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள கோவிலூரில் தமிழக அரசின் சார்பில் அம்மா திட்ட சிறப்பு முகாம் வருவாய்த் துறை சார்பில் நடைபெற்றது. அரியலூர் வட்டாட்சியர் வைத்தியநாதன் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து பெற்ற 108 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. ஊராட்சித் தலைவர் கங்காதுரை, துணை வட்டாட்சியர் முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் சுரேஷ்குமார் வரவேற்றார், ஒன்றியக் குழு உறுப்பினர் சரவணன் உள்ளிடடோர் கலந்து கொண்டனர். கிராம நிர்வாக அலுவலர் புண்ணியமூர்த்தி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai