சுடச்சுட

  

  யூரியா உரத் தட்டுப்பாட்டைப் போக்க வலியுறுத்தல்

  By அரியலூர்  |   Published on : 17th November 2014 05:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருமானூர் பகுதியில் உரம் தட்டுபாடின்றிக் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

  அரியலூர் மாவட்டம், திருமானூரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு 9-வது மாநாடு அண்மையில் நடைபெற்றது. திருமானூர் ஒன்றியச் செயலர் ஆறுமுகம் தலைமை வகித்தார். ஒன்றியத் துணைச் செயலர் பன்னீர்செல்வம் வரவேற்றார்.

  இதில், நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கவும், டெல்டா பகுதி விவசாயம் செழிக்கவும், திருமானூர் பகுதியில் 3 இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும், திருமானூரை தாலுகா தலைநகராக அறிவிக்க வேண்டும், திருமானூர் அருகேயுள்ள மேலப்பழூவூர், சேனாபதி, விழுப்பனங்குறிச்சி, கீழக்குளத்தூர், ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும், திருமானூர் ஒன்றியப் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெல் மற்றும் மானாவாரி பயிர்களுக்கு தேவையான யூரியா தட்டுப்பாடின்றி கிடைக்க, அரசு நிர்ணயித்த விலைக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்க வேண்டும்.

  அரியலூர் மாவட்டத்தில், பருவமழை குறைவாக பெய்துள்ள காரணத்தால், புள்ளம்பாடி வாய்க்காலில் மேலும் 2 மாதங்களுக்கு பாசனத்துக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  ஒன்றியப் பொருளாளர் கலியபெருமாள், மாதர் சங்க ஒன்றியச் செயலர் பரிமளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  கட்சியின் மாவட்டச் செயலர் உலகநாதன், மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் வேணுகோபால், பெரம்பலூர் மாவட்டச் செயலர் ஞானசேகர் உள்ளிட்டோர் வாழ்த்தினர். மாநில நிர்வாகக் குழூ உறுப்பினர் எம். கண்ணகி கட்சியின் வளர்ச்சி பற்றி சிறப்புரையாற்றினார். மாவட்டத் துணைச் செயலர் ஜெயராஜ் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai