சுடச்சுட

  

  அரியலூரில் நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத்திட்ட முகமையின் கீழ் 88 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 42 லட்சத்து 83 ஆயிரத்திலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் சனிக்கிழமை வழங்கினார்.

  அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் கீழ் திருமானூர் மற்றும் தா.பழூர் வட்டாரங்களில் செயல்படுத்தப்படும் 24 நீர்வடிப்பகுதிகளில் 2013-14 ஆம் ஆண்டு வரை 75 மகளிர் சுய உதவிக்குழுக்குளுக்கு ரூ.17 லட்சத்து 31 ஆயிரத்தில் கறவை மாடு, வெள்ளாடு வளர்ப்பு போன்ற வாழ்வாதாரத்தை பெருக்கக்கூடிய சுய தொழில்கள் செய்ய சுழல் நிதி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. தற்போது 2014-15-ல் வரப்பெற்ற நிதியைக் கொண்டு மேற்கண்ட நீர்வடிப்பகுதிகளில் கூடுதலாக 88 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வாழ்வாதாரத்தைப் பெருக்கும் விதமாக கறவை மாடு, வெள்ளாடு வளர்ப்பு போன்ற சுய தொழில்கள் செய்ய, சுழல்நிதி ரூ.42 லட்சத்து 83 ஆயிரத்திலான காசோலைகளை மகளிர் சுய உதவிக்குழு பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர்

  வழங்கினார்.

  இதுவரை மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மூலம் மொத்தம் 163 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.60 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பில் சுழல்நிதி கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.

  வேளாண் இணை இயக்குநர் ஏ.ஆர். குணசேகரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) ஆர். விஸ்வநாதன், தோட்டக்கலைத் துணை இயக்குநர் சுப்பையா, மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை துணை இயக்குநர் ம. செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai