சுடச்சுட

  

  அரியலூரில் தேமுதிகவினர் நாற்றுநடும் போராட்டம்

  By அரியலூர்  |   Published on : 18th November 2014 05:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூரில் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி, தேமுதிக சார்பில் நாற்றுநடும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

  அரியலூர் நகரில் 8-வது வார்டு விளாங்காரத்தெரு, அழகப்பாநகர் 2,3-வது தெரு, பெரியார்நகர் 3,4,5-வது தெரு, பயணியர் மாளிகை சாலை ஆகியன கடந்த 15 ஆண்டுகளாக செப்பனிடப்படாமல் உள்ளதால், குண்டும் குழியுமாக உள்ளன. தற்போது பெய்துவரும் மழையால், இந்த சாலைகள் சேறும், சகதியுமாக உள்ளன. எனவே, இந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி, பெரியார்நகர் 5-வது தெருவில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும், நாற்று நடும் போராட்டமும் நடைபெற்றது.

  போராட்டத்துக்கு தேமுதிக மாவட்டச் செயலாளர் இராம. ஜெயவேல் தலைமை வகித்துப் பேசுகையில், இந்தப் பகுதியில் உள்ள சாலைகள் ஆண்டுக்கணக்கில் போடப்படவில்லை. சாலைகளை செப்பனிட வேண்டும் என்று நகராட்சி அலுவலர்களிடம் முறையிட்டும் எந்தப் பயனும் இல்லை. தற்போது பெய்துவரும் மழையால் சாலை சேறும், சகதியுமாக மாறியுள்ளது. மேலும், சாக்கடை நீரும், மழைநீரும் தேங்கி நிற்பதால் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால், தொற்றுநோய் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, இந்தப் பிரச்னைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், அரியலூர் நகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றார் அவர்.

  ஆர்ப்பாட்டத்தில், அரியலூர் ஒன்றியச் செயலாளர் செல்வராஜ், நகர அவைத் தலைவர் க. சிவா, மாவட்ட இளைஞரணிச் செயலாளர் தாமஸ்ஏசுதாஸ், மாவட்ட நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், நல்லதம்பி, ரத்னகுமார், ராஜராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai