சுடச்சுட

  

  திருமானூர் அருகே யூரியா தட்டுப்பாடு: விவசாயிகள் மறியல்

  By அரியலூர்,  |   Published on : 18th November 2014 05:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே யூரியா உரத்தட்டுப்பாட்டைக் கண்டித்து விவசாயிகள் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  திருமானூர் அருகேயுள்ள ஏலாக்குறிச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த கடன் சங்கம் சுள்ளங்குடி, விழுப்பனங்குறிச்சி, பெரியமறை, ஏலாக்குறிச்சி, கரையாண்டகுறிச்சி, மேலவரப்பன்குறிச்சி, கீழவரப்பன்குறிச்சி கிராமங்களை உள்ளடக்கியது.

  டெல்டாவான இந்தப் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் மற்றும் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது இங்கு பயிரிடப்பட்டுள்ள சம்பா நெல் பயிருக்கு தேவையான யூரியா உரம் கிடைக்கவில்லை. அதேசமயம், தனியார் உரக்கடைகளில் அதிக விலைக்கு உரம் விற்கப்படுகிறது.

  இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் திருமானூர் - ஏலாக்குறிச்சி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அதோடு, ஏலாக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தையும் முற்றுகையிட்டனர். திருமானூர் காவல் துறையினர் மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

  இதனால், மறியலை விலக்கிக் கொண்ட பொதுமக்கள், கூட்டுறவு வங்கி வளாகத்தில் அமர்ந்துகொண்டு, உரம் கிடைக்கும் வரை செல்லப்போவதில்லை என்று தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai