சுடச்சுட

    

    அரியலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் தலைமையில், ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்தில், அனைத்து ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்துக்கு வழங்க வேண்டிய 2014-15 ஆம் ஆண்டுக்கான சந்தா தொகை ரூ. 1,15,500-க்கான வங்கி காசோலையை, சங்க நிர்வாகிகளிடம் ஆட்சியர் வழங்கினார்.

    மேலும், புதுவாழ்வுத் திட்டத்தின் சார்பில், கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் மூலம் 13 மாற்றுத்திறனாளி சிறப்புக் குழுக்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம், ரூ. 6.5 லட்சம் நேரடி கடனுக்கான காசோலைகள், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், மாநில தீவன மேம்பாட்டுத் திட்டம் 2014-15-ன் கீழ், தீவன புல் சாகுபடி செய்ததற்காக 16 விவசாயிகளுக்கு ரூ. 40 ஆயிரம் மானியத் தொகைக்கான காசோலைகள் என மொத்தம் 29 பயனாளிகளுக்கு ரூ. 8,05,500 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பா. ரவீந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சடையப்ப விநாயகமூர்த்தி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள் மற்றும் தணிக்கை) சௌ. கங்காதரணி, திட்ட மேலாளர் (புதுவாழ்வுத் திட்டம்) சுந்தரேஸ்வரன், மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத் துறை) செல்வபெருமாள், தனித்துணை ஆட்சியர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai