சுடச்சுட

  

  அரியலூர் மாவட்டத்தில் நவ. 21-ல் 3 வட்டங்களில் "அம்மா' திட்ட முகாம்

  By dn  |   Published on : 19th November 2014 05:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் மாவட்டத்தில் "அம்மா' திட்ட சிறப்பு முகாம் நவ. 21-ம் தேதி (வெள்ளிக்கிழமை) 3 வட்டங்களில் நடைபெறுகிறது.

  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும் தலா ஒரு கிராமம் வீதம் "அம்மா' திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. நவ. 21-ம் தேதி அரியலூர் வட்டத்துக்கு உட்பட்ட இலந்தைக்கூடம் கிராமத்திலும், செந்துறை வட்டம் சிறுகடம்பூர் கிராமத்திலும், உடையார்பாளையம் வட்டம் அங்கராயநல்லூர் கிராமத்திலும் இம் முகாம்கள் வருவாய் வட்டாட்சியர் தலைமையில் நடைபெறுகிறது. இதில் வருவாய்த் துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai