சுடச்சுட

  

  கேபிள் கட்டணத்தை கூடுதலாக நிர்ணயிக்கக் கோரி ஆபரேட்டர்கள் அரியலூரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவர் தங்கசாமி தலைமை வகித்தார்.

  ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து செயலாளர் ஜார்ஜ் பேசுகையில், தற்போது மாதம் ஒன்றுக்கு வீடுகளில் ரூ. 70 வசூல் செய்வதை ரூ. 150 ஆக அரசு உயர்த்த வேண்டும். அரசு கேபிள் டிவியில் தனியார் தலையீட்டை தடுக்க வேண்டும்.

  தரமான, தெளிவான ஒளிபரப்பை வழங்க வேண்டும், 2011-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைத்தான் கேபிள் ஆபரேட்டர்கள் வசூல் செய்து கொண்டிருக்கிறார்கள், ஆனால் அதன்பிறகு அனைத்து பொருள்கள் விலையும் உயர்ந்துவிட்டது.

  கேபிள் டிவி கட்டணம் மட்டும் உயர்த்தப்படவில்லை, இதை கருத்தில் கொண்டு, தமிழக அரசு எங்கள் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai