சுடச்சுட

  

  வாக்காளர் பட்டியல் விண்ணப்பங்கள்: காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

  By dn  |   Published on : 19th November 2014 05:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் குறித்து பொதுமக்களிடமிருந்து வரும் விண்ணப்பங்கள் மீது காலதாமதமின்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், சிறுபான்மையினர் நல மாநில ஆணையருமான அ. முகமது அஸ்லாம் அறிவுறுத்தினார்.

  அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்கத் திருத்தப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் முன்னிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:

  அரியலூர், ஜயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் கடந்த 15.10.2014 முதல், 10.11.2014 வரை பெறப்பட்ட படிவம் 6,7,8 மற்றும் 8ஏ ஆகியவை சேர்த்து பெறப்பட்டுள்ள 16055 விண்ணப்பங்களை உடனடியாக முறையே கள ஆய்வுக்கு உள்படுத்தி தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி, விசாரணை மேற்கொண்டு உரிய ஆணைகள் பிறப்பிக்க வேண்டும், மேலும் முக்கிய நபர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும், பெறப்படும் விண்ணப்பங்களை உரிய முறையில் பதிவேடுகள் பராமரித்து பதிவுகள் மேற்கொள்ள அலுவலர்கள் ஆவன செய்ய வேண்டும் என்றார் அவர்.

  கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பா. ரவீந்திரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஸ்தபா கமால் பாட்ஷா, உடையார்பாளையம் வருவாய்க் கோட்டாட்சியர் கருணாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai