சுடச்சுட

  

  அடிப்படை வசதிகள் கோரி அரியலூரில் பொதுமக்கள் சாலை மறியல்

  By அரியலூர்,  |   Published on : 20th November 2014 04:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சாலை சீரமைப்பு, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி, அரியலூரில் பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  அரியலூர் நகராட்சி 10-வது வார்டு கல்லக்குடி தெரு, சடையப்ப படையாச்சித் தெரு, வஉசி தெரு உள்ளிட்ட தெருக்களில் புதை சாக்கடைக்காக குழிகள் தோண்டப்பட்டு சரியாக மூடப்படவில்லை. தற்போது பெய்துவரும் மழையால், இந்தப் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி சாலை முழுவதும் சேறும், சகதியுமாக உள்ளது. இதனால், அந்தப் பகுதி பொதுமக்கள் சாலையில் நடந்து செல்வதற்குக்கூட சிரமப்படுகின்றனர். மேலும், இந்தத் தெருக்களில் மழைநீர் தேங்கியுள்ளதாலும், கழிவுநீர் ஓடை சுத்தம் செய்யப்படாததாலும், கொசுக்கள் பெருகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

  இந்த நிலையில், சாலையை சீரமைத்து, அடிப்படை சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி, 10-வது வார்டைச் சேர்ந்த பொதுமக்கள் அரியலூர்- திருச்சி சாலையிலும், பிறகு தஞ்சாவூர் - அரியலூர் புறவழிச்சாலையிலும் மறியலில் ஈடுபட்டனர்.

  அரியலூர் நகரக் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிகண்டன், நகராட்சி உதவிப் பொறியாளர் சம்பந்தம் உள்ளிட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில், மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

  இந்த மறியல் போராட்டத்தால், அரியலூர்-தஞ்சை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai