சுடச்சுட

  

  கங்கைகொண்ட சோழபுரத்தில் புகைப்படக் கண்காட்சி

  By அரியலூர்  |   Published on : 20th November 2014 05:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரத்தில் உலகப் பாரம்பரிய வாரவிழா புகைப்படக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.

  விழாவுக்கு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக சுவடிப்புலம் துறைத் தலைவர் ராஜவேலு தலைமை வகித்து, சோழர்கால கோவில்கள் என்ற தலைப்பிலான புகைப்படக் கண்காட்சியையும், தூய்மையான பாரதம்- விழிப்புணர்வு பேரணியையும் தொடக்கி வைத்துப் பேசினார். முதுநிலை பராமரிப்பாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தார். விழிப்புணர்வுப் பேரணியில் பங்கேற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் புராதன சின்னங்களை காப்பதற்கான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி முழக்கமிட்டுச் சென்றனர்.

  பிறகு நடைபெற்ற விழாவில், மாணவ, மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை துணைக் கண்காணிப்பாளர் மோகன்தாஸ் சிறப்புரையாற்றினார். இந்து சமய அறநிலையத் துறை சார்பில், கோவில் நிர்வாக அலுவலர் ராஜேந்திரன், ஊராட்சித் தலைவர் பாண்டியன், மகாதேவன் உள்ளிட்ட ஊராட்சிப் பிரதிநிதிகள், கோவில் பணியாளர்கள், தொல்லியல் துறை ஊழியர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். தொல்லியல் துறை ஆய்வாளர் யதீஷ்குமார் நன்றி கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai