சுடச்சுட

    

    செந்துறை அருகேசாலை விபத்தில் காயமடைந்தவர் சாவு

    By அரியலூர்  |   Published on : 20th November 2014 04:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செந்துறை அருகே சாலை விபத்தில் காயமடைந்தவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

    பெரம்பலூர் மாவட்டம், கோவில்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜு (35). இவரும், அதே ஊரைச் சேர்ந்த குமரேசன் (20) என்பவரும், ஒரு இரு சக்கர வாகனத்தில் கடந்த 16 ஆம் தேதி அரியலூர் மாவட்டம், பொன்பரப்பி சென்றுவிட்டு, ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். பொன்குடிக்காடு கிராமத்தில் அய்யனார்குளம் அருகே வந்தபோது குறுக்கே மாடு வந்ததால், இரு சக்கர வாகனத்தை திடீர் என குமரேசன் நிறுத்தினார். இதில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு, குமரேசன், ராஜு இருவரும் காயமடைந்தனர். இதில், சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

    இதுகுறித்து செந்துறை காவல் நிலைய ஆய்வாளர் பாலாஜி விசாரித்து வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai