சுடச்சுட

  

  செந்துறை ஒன்றியத்தில் ஊராட்சி இயக்குநர் ஆய்வு

  By அரியலூர்  |   Published on : 20th November 2014 04:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியப் பகுதிகளில் மாவட்ட ஊராட்சி இயக்குநர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

  செந்துறை ஒன்றியம், செந்துறை, உஞ்சினி, வஞ்சினபுரம் ஊராட்சிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஊராட்சி இயக்குநர் கங்காதாரணி ஆய்வு மேற்கொண்டார்.

  கிராமங்களில் தெருக்களில் உள்ள குப்பைகளை உடனுக்குடன் அகற்றவும், மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளை தூய்மை செய்யவும் ஊராட்சி அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். ஊருக்கு ஒதுக்குப்புறமாக குழி தோண்டி அவற்றில் குப்பைகளை போடவும், அனைத்துப் பகுதிகளிலும் கொசுமருந்து அடிக்கும்படியும் அவர் உத்தரவிட்டார்.

  ஆய்வின்போது, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பழகன், ஒன்றியப் பொறியாளர்கள் சண்முகசுந்தரம், தங்கராசு, செந்துறை ஊராட்சித் தலைவர் செல்வராசு, வஞ்சினபுரம் ஊராட்சித் தலைவர் தனபால், உஞ்சினி ஊராட்சித் தலைவர் அப்பாசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai