சுடச்சுட

  

  நிலக்கரி திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி ஐஜேகே ஆர்ப்பாட்டம்

  By அரியலூர்  |   Published on : 20th November 2014 05:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஜயங்கொண்டம் நிலக்கரி திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஐஜேகே சார்பில் புதன்கிழமை ஜயங்கொண்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  அரியலூர் கிழக்கு மாவட்ட இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் ஜயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் எஸ். செல்வநாதன் தலைமை வகித்தார்.

  கோரிக்கைகள்:

  ஜயங்கொண்டத்தில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும், ஜயங்கொண்டம் ஆவேரி ஏரியையும், உய்யக்கொண்டான் ஏரியையும் தூர்வார வேண்டும், கரும்பு விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும், கொள்ளிடத்தில் குருவாடி தலைப்பில் தடுப்பணை கட்டி பொன்னாற்றில் நிரந்தரமாக தண்ணீர்வர வழிவகை செய்ய வேண்டும்.

  ஜயங்கொண்டம் நிலக்கரி திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் அல்லது உரியவர்களிடம் நிலத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும், பால் விலையை உயர்த்திய தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

  ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் பி. ஜெயசீலன், மாநில இளைஞரணித் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்டச் செயலாளர் ஜோசப், செயற்குழு உறுப்பினர் கார்மல்ராஜ், பொருளாளர் ராசப்பா, செயலாளர் லாரன்ஸ் உள்ளிட்டோர் பேசினர்.

  ஜயங்கொண்டம் ஒன்றியத் தலைவர் பிரேம்ஜோசப் வரவேற்றார். சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai