சுடச்சுட

  

  ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

  By ஜயங்கொண்டம்  |   Published on : 21st November 2014 05:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் வட்டார வள மையத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. பயிற்சியின் கருத்தாளர்களாக தாமோதரன் மற்றும் சரவணன் ஆகியோர் பங்கேற்று மாணவர்களின் கற்றல் திறன், வாசிக்கும், எழுதும் திறன், அடிப்படை கணித திறன்களை மேம்படுத்துதல், படைப்பாற்றல் திறன், சுயமாக சிந்த்தல், வகுப்பறையில் பெற்ற திறன்களை நடைமுறை வாழ்வியலோடு தொடர்புபடுத்துதல் குறித்து பயிற்சியளித்தனர்.இதில் ஜயங்கொண்டம், அரியலூர், தா. பழூர், செந்துரை, ஆண்டிமடம், திருமானூர் ஒன்றியங்களைச் சேர்ந்த ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்கள் 76 பேர் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai