சுடச்சுட

  

  கல்லங்குறிச்சி கோயிலில் அதிமுகவினர் சிறப்பு வழிபாடு

  By அரியலூர்,  |   Published on : 21st November 2014 05:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி அரியலூர் அருகே கல்லங்குறிச்சி கலியுக வரதராஜப் பெருமாள் கோயிலில் அதிமுகவினர் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினர்.

  அரியலூர் மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டுக்கு மாவட்டச் செயலர் தாமரை. ராஜேந்திரன் தலைமை வகித்தார். இதை முன்னிட்டு கல்லங்குறிச்சி கலியுக வரதராஜப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு மலர் அலங்காரத்துடன் ஜெயலலிதா பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு மகா தீபாராதனை நடத்தப்பட்டது.

  இந்நிகழ்ச்சியில் துரை. மணிவேல் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ பாளை. அமரமூர்த்தி, மாவட்ட அவைத் தலைவர் கணேசன், மாவட்ட மாணவர் அணிச் செயலர் ஓ.பி. சங்கர், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலர் சிவசங்கர், மாவட்ட மகளிர் அணிச் செயலர் ஜீவா அரங்கநாதன், அவைத் தலைவர் செல்வாம்பாள், மாவட்ட தொண்டர் அணி செயலர் சேட்டு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai