சுடச்சுட

  

  218 பயனாளிகளுக்கு ரூ. 34 லட்சம் நலத் திட்ட உதவிகள்

  By அரியலூர்  |   Published on : 21st November 2014 05:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூரில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 218 பயனாளிகளுக்கு ரூ. 33.93 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் அண்மையில் வழங்கினார்.

  அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் கலந்து கொண்டு தமிழக முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 41 பயனாளிகளுக்கு கல்வி உதவித் தொகை ரூ. 14 லட்சத்து 800 மதிப்பிலும், 27 பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகை ரூ. 1 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பிலும், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை 150 குடும்பத்தினருக்கு ரூ. 18 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலும் என மொத்தம் 218 பயனாளிகளுக்கு ரூ. 33 லட்சத்து 93 ஆயிரத்து 800 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

  இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பா. ரவீந்திரன், தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) சீனிவாசன், மாவட்ட வழங்கல் அலுவலர் கு. மோகன், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர்கள் கோ. தாரகேஸ்வரி (அரியலூர்), எஸ். ஜெயராமன் (ஜயங்கொண்டம்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai