சுடச்சுட

  

  அரியலூர் ரெப்கோ வங்கி சார்பில் ரூ. 38 கோடி கடன் வழங்க இலக்கு

  By அரியலூர்  |   Published on : 22nd November 2014 05:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் ரெப்கோ வங்கி சார்பில், 2014- 15-ல் ரூ. 38 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் கிளை துணை மேலாளர் எம். மனோஜ் பிரபாகர்.

  அரியலூர் ரெப்கோ வங்கி கிளையின் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற 46 ஆம் ஆண்டு விழாவுக்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியது:

  ரெப்கோ வங்கி கடந்த 1968 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அரியலூர் கிளை தொடங்கப்பட்டு 5 ஆண்டுகளாகிறது.

  ரெப்கோ வங்கி அரியலூர் கிளை மூலம் கடந்த 2013-14 ஆம் நிதியாண்டில் ரூ. 31 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 3.56 கோடி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ரூ. 10.5 கோடி வைப்பாக பெறப்பட்டுள்ளது.

  2014- 15 ஆம் ஆண்டில் மகளிர் சுய உதவிக் குழு மற்றும் தொழில் அபிவிருத்தி கடனாக ரூ. 38 கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ. 15 கோடி வைப்புத் தொகை பெறுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ரெப்கோ வங்கி புதிதாக தங்ல்ஸ்ரீர் ஈர்ன்க்ஷப்ங் ஒன்ய்ண்ர்ழ் என்ற பெயரில் வைப்பு நிதித் திட்டத்தையும், மற்றும் வணிகர்களுக்கு சிறப்புக் கடன் திட்டமான தங்ல்ஸ்ரீர் பழ்ஹக்ங்ழ்ள் ஈங்ப்ண்ஞ்ட்ற் என்ற பெயரிலும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது என்றார்.

  நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக எஸ்.ஆர். கணேசன், ஏபிஎன். சுதாகர், ஏ. மணிவண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நுண்கடனுக்கான காசோலையை வழங்கி வங்கியின் செயல்பாடு குறித்து பாராட்டினர். இதில், வங்கி காசாளர் கலியமூர்த்தி, இளநிலை உதவியாளர் ஞானசேகரன் மற்றும் திரளான வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai