சுடச்சுட

  

  இரண்டு அஞ்சல் நிலையங்களில் ரூ. 1.9 லட்சம் கையாடல்

  By அரியலூர்,  |   Published on : 22nd November 2014 05:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் அருகே 2 அஞ்சல் நிலையங்களில் ரூ. 1 லட்சத்து 9 ஆயிரத்து 860-ஐ கையாடல் செய்ததாக 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  அரியலூர் மாவட்டம், வெற்றியூரில் கிராம அஞ்சலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அஞ்சல் நிலையத்தில் அலுவலராக திருச்சி மாவட்டம், வடக்கு தாராநல்லூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (30) பணியாற்றி வந்தார். இந்த அஞ்சல் நிலையத்தில் பொதுமக்கள் சேமிப்புக் கணக்கில், செலுத்தப்பட்ட ரூ. 57 ஆயிரத்து 750 கணக்கில் வரவு வைக்கப்படாமல் இருந்ததை லால்குடி தலைமை அஞ்சல் நிலைய அலுவலர் பசுபதி ஆய்வின்போது தெரியவந்தது.இதேபோல், அரியலூர் அருகேயுள்ள கடுகூர் அஞ்சல் நிலையத்தில் தலையாரிக்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் (51) அஞ்சல் அலுவலராக பணியாற்றி வந்தார். இந்த அஞ்சல் நிலையத்தில் பொதுமக்கள் செலுத்திய பணம் ரூ. 52 ஆயிரத்து 110 கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்று அரியலூர் அஞ்சல் அலுவலக ஆய்வாளர் முகேஷ்குமார்குல்தீப் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அரியலூர் மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், உதவி ஆய்வாளர் ஜெயமோகன் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai