சுடச்சுட

  

  தா. பழூர் அருகே சத்துணவு சாப்பிட்ட 23 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

  By அரியலூர்,  |   Published on : 22nd November 2014 05:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் மாவட்டம், தா. பழூர் அருகேயுள்ள இருகையூர் கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு 40 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதில், 13 மாணவர்களும், 10 மாணவிகளும் பள்ளியில் உள்ள சத்துணவுக் கூடத்தில் சத்துணவு சாப்பிடுகின்றனர்.

  வெள்ளிக்கிழமை மாணவ, மாணவிகளுக்கு தக்காளி சாதமும், முட்டையும் உணவாக வழங்கப்பட்டது. இதைச் சாப்பிட்ட சிறிது நேரத்தில், ஜெயராஜ், யுவராஜ், பிரியதர்ஷினி, சிவரஞ்சனி உள்ளிட்ட 23 பேரும் தொடர்ந்து வாந்தி எடுத்து மயக்கமடைந்தனர்.

  பள்ளி தலைமையாசிரியர் அடைக்கலசாமி, சத்துணவு அமைப்பாளர் திருஞானம், சத்துணவு சமையலர் வேம்பு மற்றும் ஊர்ப் பொதுமக்கள் மயக்கமடைந்த மாணவ, மாணவிகளை ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாந்தி, மயக்கத்துக்கான கராணம் தெரியவில்லை. சத்துணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகள் அனைவரும் வாந்தி எடுத்து மயக்கமடைந்ததால், இருகையூர் கிராமத்தில் பரபரப்பு நிலவியது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai