சுடச்சுட

  

  அரியலூர் மாவட்ட வணிக வங்கிகளின் சார்பில், ரூ. 1 கோடியே 80 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பில் கடன் திட்டங்களின் கீழ் நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெள்ளிக்கிழமை வழங்கினார்.

  அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள வணிக வங்கிகள் மற்றும் முன்னோடி வங்கிகளின் கடன் வழங்கும் விழா ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் அனைத்து வணிக வங்கிகளின் சார்பில் 199 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 80 லட்சம் மதிப்பில் பல்வேறு கடன் திட்டங்களின் கீழ் நலத் திட்ட உதவிகளை வழங்கி ஆட்சியர் பேசியது:

  அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிக வங்கிகள் மூலம் முன்னுரிமை கடன் வழங்கும் விழாவில், கல்வி, தொழில் தொடர்பான நலத் திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. அவற்றில் அரியலூர் பாரத ஸ்டேட் வங்கி 41 பயனாளிகளுக்கு ரூ. 26.47 லட்சம் மதிப்பில் கடனுக்கான காசோலைகளையும், கனரா வங்கி மூலம் 65 பயனாளிகளுக்கு ரூ. 45.15 லட்சம் மதிப்பில் கடனுக்கான காசோலைகளையும், இந்தியன் வங்கி மூலம் 74 பயனாளிகளுக்கு ரூ. 60 லட்சம் மதிப்பில் கடனுக்கான காசோலைகளையும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் 6 பயனாளிகளுக்கு ரூ. 18 லட்சம் மதிப்பிலான கடனுக்கான காசோலைகளையும், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி சார்பில் 8 பயனாளிகளுக்கு ரூ. 23.86 லட்சம் மதிப்பில் கடனுக்கான காசோலைகளையும், பேங்க் ஆப் இந்தியா மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பில் கடனுக்கனான காசோலைகளையும், பேங்க் ஆப் பரோடா சார்பில் 2 பேருக்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலும், லட்சுமி விலாஸ் வங்கியின் சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ. 30 ஆயிரம் மதிப்பில் கடனுக்கான காசோலைகள் என 199 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 80 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பில் கடனுக்கான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன என்றார் ஆட்சியர்.

  இந்நிகழ்ச்சியில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் டி. முரளிகிருஷ்ணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சடையப்பவிநாயகமூர்த்தி, வேளாண் இணை இயக்குநர் குணசேகரன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள், வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai