சுடச்சுட

  

  அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள அங்கராயநல்லூரில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  மாவட்ட வருவாய் அலுவலர் ரவீந்திரன் தலைமை வகித்தார். உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜி. கருணாகரன் முன்னிலை வகித்தார்.

  முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், பட்டா மாற்றம், இலவச வீட்டுமனை, முதியோர் உதவித்தொகை கேட்டு பெறப்பட்ட 180 மனுக்களில் 87 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. முகாமில் வட்டாட்சியர் திருமாறன், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ஜெயராமன் உள்ளிட்டோர் பேசினர். விஏஓக்கள் பொய்யாமொழி, நடராஜன், கொளஞ்சிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகர்மன்ற உறுப்பினர் இந்திரா ராஜ்குமார் வரவேற்றார். வருவாய் ஆய்வாளர் சுசிலா நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai