சுடச்சுட

  

  அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் கைவிடப்பட்ட ஒரு மாத ஆண்குழந்தை அரசு தொட்டில் குழந்தைத் திட்டத்தில் சேர்க்கப்பட்டது.

  அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சனிக்கிழமை மாலை 3 மணியளவில் ஒரு மாத ஆண் குழந்தையுடன் வந்த பெண் ஒருவர் மருத்துவமனைக்கு வந்திருந்த மூதாட்டியிடம் குழந்தையை பார்த்துக்கொள்ளுமாறு கூறி அருகிலிருந்த படுக்கையில் குழந்தையைப் போட்டுச் சென்றார். சிறிது நேரம் கழித்து குழந்தை அழத்தொடங்கியது. அந்த மூதாட்டியும் பக்கத்தில் இருந்தவர்களும் அந்தப் பெண்ணை தேடியபோது அவர் காணாமல் போயிருந்தார்.

  தகவலறிந்த மருத்துவர் குழந்தையைப் பரிசோதித்து விட்டு குழந்தை ஆரோக்கியமாக உள்ளது என்பதை உறுதிசெய்து குழந்தையை அரசு தொட்டில் குழந்தைத் திட்டத்தில் சேர்க்கப்படுவதாகக் கூறினார். ஜயங்கொண்டம் காவல் ஆய்வாளர் குணசேகரன் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai