சுடச்சுட

    

    அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வேண்டி அரியலூர் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

    அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு வழிபாட்டில் துரை. மணிவேல் எம்எல்ஏ தலைமையில், கோதண்டராமசாமி பெருமாளுக்கும், தாயாருக்கும் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அதிமுகவினர் 108 தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    மாவட்டச் செயலர் தாமரை. ராஜேந்திரன், முன்னாள் எம்பி. இளவரசன்,முன்னாள் எம்எல்ஏ பாளை. அமரமூர்த்தி, மாவட்ட அவைத் தலைவர் கணேசன், மாவட்ட மாணவரணிச் செயலர் ஓ.பி. சங்கர், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணிச் செயலர் சிவசங்கர், நகரச் செயலர் ஏஎஸ்எம். கண்ணன், மாவட்ட மகளிரணி அவைத் தலைவர் செல்வாம்பாள், மகளிர் அணிச் செயலர் ஜீவா அரங்கநாதன்,நகர்மன்ற உறுப்பினர்கள் சிவஞானம், கருணாநிதி, வழக்குரைஞர் ஜெயகுமார் உள்ளிட்ட திரளான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai