சுடச்சுட

  

  டால்மியா சிமென்ட் ஆலை அலுவலர்களுக்குப் பரிசளிப்பு

  By அரியலூர்,  |   Published on : 23rd November 2014 03:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிமென்ட் ஆலையில் ஜப்பானிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் 5 எஸ் கோட்பாடுகளை சிறப்பாகக் கடைபிடித்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

  அரியலூரில் இயங்கிவரும் டால்மியா சிமென்ட் ஆலை நிறுவனத்தில் ஜப்பானிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் 5 எஸ் எனப்படும், தேவையற்றதை நீக்குதல், தேவையான பொருட்களை ஒழுங்குபடுத்துதல், அவற்றைத் தூய்மை செய்தல், தரம் பிரித்தல், தக்க வைத்தல் என்ற கோட்பாடுகள் கடைபிடிக்கப்படுகின்றன.

  இந்தக் கோட்பாடுகளைச் சிறப்பாக செயல்படுத்தியவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஆலை வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. பரிசுகளை வழங்கி நிர்வாக இயக்குநர் கிருஷ்ணகுமார் பேசியது:

  அரியலூர் பகுதியில் செயல்படும் டால்மியா சிமென்ட் நிறுவனம் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிமென்ட் உற்பத்தியில் முன்னோடியாகத் திகழ்கிறது. மனிதவளம், தொழில்நுட்பம், மின் உற்பத்தி, மற்றும் பல்வேறு துறைகளில் அதிநவீன வளர்ச்சி கண்ட இந்நிறுவனம் ஜப்பானிய பெருந்தொழில் நிறுவனங்களில் கடைபிடிக்கப்படும் 5 எஸ் கோட்பாடுகளை ஆலையில் அறிமுகம் செய்துள்ளது.

  கடந்தாண்டு பல்வேறு பயிற்சிகளுடன் தொடங்கப்பட்ட இந்தக் கோட்பாடு ஆலையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த உதவியுள்ளது. இந்தக் கோட்பாட்டை டால்மியா நிறுவனம் தனது ஆலையில் மட்டும் செயல்படுத்தாமல் ஆலை நிர்வாகிகள் குடும்பத்திலும் இதை ஊக்குவித்து வருகிறது. ஆலையில் இந்தக் கோட்பாடுகளை வெற்றிகரமாக செயல்படுத்திய ஆலை நிர்வாகிகளுக்கு பரிசளிக்கப்பட்டுள்ளது. இதேபோல, அனைத்து நிர்வாகிகளும் பரிசு பெற முயற்சிக்க வேண்டும் என்றார் அவர்.

  இந்நிகழ்ச்சியில் 5 எஸ் திட்ட அதிகாரி புசாரி பரிசு பெற்றவர்களின் சாதனைகளை விளக்கினார். நிர்வாக தொழில்நுட்பத் தலைவர் விநாயகமூர்த்தி, ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai