சுடச்சுட

  

  அரியலூரில் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இரவுக் காவலாளி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

  அரியலூர் விளாங்காரத் தெருவில் வசித்து வருபவர் மங்கள்பகதூர் (44), இரவுக் காவலாளி. இவரது மனைவி கவுடாதேவிசிங், மகள் சிந்துசிங் (13). இவர் அரியலூரில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு மாணவி. இந்நிலையில், மங்கள்பகதூர், மது குடித்து விட்டு வந்து மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து கவுடாதேவிசிங் அளித்த புகாரின்பேரில் அரியலூர் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிகண்டன் வழக்குப் பதிந்து மங்கள்பகதூரை கைது செய்தார்.

  ஆதார் புகைப்படம் எடுக்க அணுகலாம்

  ஆதார் அடையாள அட்டைக்கு புதிதாக விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது பகுதிக்குள்பட்ட வட்டாட்சியர் அலுவலத்திற்கு சென்று விண்ணப்பித்து பயன் பெறலாம்.

  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதார் அட்டைக்காக புகைப்படம் எடுத்து, இதுவரை ஆதார் அட்டை கிடைக்காதவர்கள் மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது வழங்கப்பட்ட ரசீதுடன், அந்தந்த வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் (பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்டோர் மட்டும்) அமைக்கப்பட்டுள்ள புகைப்படம் எடுக்கும் மையத்தை அணுகலாம். ரசீது காணாமல் போயிருந்தால், குடும்ப உறுப்பினர் அல்லது பக்கத்து

  வீட்டு நபர்களின் ரசீதை கொண்டு சென்று தங்களது ஆதார் அட்டையின் தற்போதைய நிலையைத் தெரிந்து கொள்ளலாம்.

  மேலும், இதுவரை புகைப்படம் எடுக்காமல் உள்ளவர்கள் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் நகராட்சி

  அலுவலகத்தில் உள்ள புகைப்படம் எடுக்கும் மையங்களில் புதிதாக விண்ணப்பித்து புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai