சுடச்சுட

  

  விவசாயிகளுக்கு யூரியா தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

  By அரியலூர்,  |   Published on : 23rd November 2014 03:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான யூரியா தட்டுப்பாடின்றிக் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய ஜனநாயக் கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

  கட்சியின் சனிக்கிழமை நடைபெற்ற அரியலூர் மேற்கு மாவட்ட செயல்வீரர்கள்

  கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் சி. பாஸ்கர் தலைமை வகித்தார்.

  கூட்டத்தில், விவசாயப் பணிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும், பால் விற்பனை விலையைக் குறைக்க வேண்டும், அரியலூர் மாவட்ட சாலைகளைச் சீரமைக்க வேண்டும், அரியலூர் மாவட்டத்தில் பிறந்த கவிஞர் மருதகாசிக்கு சிலை அமைக்க வேண்டும், கொள்ளிடம், காவிரியாற்றின் குறுக்கே 10 கி.மீக்கு ஒரு தடுப்பணை வீதம் கட்ட வேண்டும், விவசாயிகள் தேவைக்கு யூரியா மற்றும் விவசாய இடுபொருட்கள் தட்டுப்பாடின்றிக் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், அரியலூர் நகரில் புதைசாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  கூட்டத்தில் மாநிலக் கொள்கைப் பரப்புச் செயலர் எம்.எஸ். ராஜேந்திரன்,மாநிலத் துணைப் பொதுச் செயலர்கள் ஜீவா, கதிர். கணேசன், மாவட்ட மகளிர் அணி செயலர் பி. பச்சையம்மாள், ஒன்றியத் தலைவர்கள் கோவிந்தராஜ் (அரியலூர்), ஜி. ஆனந்தகிருஷ்ணன் (திருமானூர்), வேந்தர் பேரவை மாவட்ட அமைப்பாளர் அருள்கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். செந்துறை ஒன்றியத் தலைவர் எஸ். கந்தசாமி வரவேற்றார். அரியலூர் ஒன்றியச் செயலர் சிவஜோதி நன்றி கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai