சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற அம்மா திட்ட முகாம்கள் மூலம் 49 ஆயிரம் மனுக்களுக்

    குத் தீர்வு காணப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்.

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் இலந்தைக்கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட சிறப்பு முகாமுக்குத் தலைமை வகித்து அவர் மேலும் பேசியது:

    அரியலூர் மாவட்டத்தில் முதல்கட்டமாக பெறப்பட்ட 54973 மனுக்களில் 35143 மனுக்களுக்கும், 2-ம் கட்டமாக பெறப்பட்ட 18545 மனுக்களில் 13541 மனுக்களுக்கும் உரிய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அரியலூர் வட்டத்தில், இலந்தைக்கூடம், செந்துறை வட்டத்தில், சிறுகடம்பூர்,உடையார்பாளையம் வட்டத்தில் அங்கராயன்நல்லூர் ஆகிய கிராமங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வட்டாட்சியர் தலைமையில் அனைத்து வருவாய்க் கிராமங்களில் இம்முகாம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

    முகாமில் துரை. மணிவேல் எம்எல்ஏ முன்னிலை வகித்தார்.

    ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் குமாரவேல்,இலந்தைக்கூடம் ஊராட்சித் தலைவர் சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai