சுடச்சுட

  

  அரியலூர் மாவட்டம், செம்பியக்குடியைச் சேர்ந்த மாணவி பொறியியல் படிப்பில் தங்கப்பதக்கம் பெற்றார்.

  அரியலூர் மாவட்டம், செம்பியக்குடி ஊராட்சித் தலைவர் காமராஜ் மகள் அபிராமி, இவர் திருச்சி,சமயபுரம் எஸ். ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் பயின்று வந்தார்.

  அண்ணா பல்கலைகழகத்துக்குள்பட்ட 560 கல்லூரிகளில் நடைபெற்ற தேர்வில் அபிராமி முதலிடம் பிடித்தார்.

  இதைத் தொடர்ந்து சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், விவேகானந்தர் அரங்கில் அண்மையில் நடைபெற்ற விழாவில் அபிராமிக்கு, தமிழக ஆளுநர் ரோசையா தங்கப் பதக்கம், சான்றிதழை வழங்கினார்.

  அபிராமியை, சந்திரகாசி எம்பி, துரை.மணிவேல் எம்எல்ஏ, புவியியலாளர் எஸ்.எம். சந்திரசேகர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai