சுடச்சுட

  

  டேக்வாண்டோ போட்டியில் செந்துறை மாணவி சிறப்பிடம்

  By அரியலூர்  |   Published on : 24th November 2014 04:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கரூர் மண்டல அளவில் நடத்தப்பட்ட போட்டியில் செந்துறை மாணவி வெண்கலம் வென்றார்.

  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மண்டல அளவிலான டேக்வாண்டோ (தற்காப்புக் கலை) போட்டிகள் கரூரில் அண்மையில் நடைபெற்றன.

  இதில் அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குவாகம் அரசு உயர்நிலைப்பள்ளியின் 10 ஆம் வகுப்பு மாணவி சு. விமலா 2-ம் இடம் பெற்று வெண்கலம், சான்றிதழ், ரூ. 400 பெற்றார்.

  அந்த மாணவியை, பள்ளித் தலைமை ஆசிரியை (பொ) அறிவுச்செல்வி, உடற்கல்வி ஆசிரியர் ராஜராஜன், ஆசிரியர்கள் சக்திவேல், புகழேந்தி, அருணகிரி, வெங்கடேசன், மாதவன், ஆசிரியைகள் கலைவாணி,விஜயலெட்சுமி உள்ளிட்டோர் பாராட்டினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai