சுடச்சுட

    

    பொன்னப்புடையார் ஏரியை தூர்வார வலியுறுத்தல்

    By அரியலூர்,  |   Published on : 24th November 2014 04:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம், பொன்னப்புடையார் ஏரியைத் தூர்வார வேண்டுமென ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து, அரியலூர் மாவட்டம், இலந்தைக்கூடம் கிராம பொதுமக்கள் அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜிடம் அளித்த கோரிக்கை மனு, இலந்தைக்கூடத்தில் அமைந்துள்ள பொன்னப்புடையார் ஏரியின் மூலம் சுமார் 200 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில் இந்த ஏரியைத் தூர்வாரி பல ஆண்டுகளாகி விட்டதால் தற்போது ஏரி மண் தரைபோல உள்ளது. இதனால் இதன் பாசனப் பரப்பும் குறைந்து வருகிறது. மேலும் ஏரியின் 4 கரைகளிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் நீர்ப்பிடிப்பின் அளவும் குறைந்து வருகிறது. இதனால் ஏரியைத் தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க உறுதியளித்தார். இதேபோல இலந்தைக்கூடத்தில் உள்ள சின்னப்புடையார் மற்றும் ஐயாவூ ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றி தூர்வார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai