சுடச்சுட

    

    அரியலூர் குறைதீர் முகாமில் ரூ. 74 ஆயிரம் நலத்திட்ட உதவிகள்

    By அரியலூர்  |   Published on : 25th November 2014 03:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ. 74,161 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வழங்கினார்.

    இந்தக் கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில், மாநில தீவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தீவன புல் சாகுபடி செய்தமைக்காக 12 விவசாயிகளுக்கு தலா ரூ. 2 ஆயிரம், 10 விவசாயிகளுக்கு தலா ரூ. 4 ஆயிரம், 1 விவசாயிக்கு ரூ. 8 ஆயிரம் என மொத்தம் ரூ. 72 ஆயிரம் மதிப்பில் மானிய தொகைக்கான காசோலை, வேளாண் துறை சார்பில், 6 விவசாயிகளுக்கு உயிர் உரம், திரவ நுண்சத்து, நெல் நுண்சத்து, தக்கை பூண்டு என ரூ. 2,161 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என 29 பயனாளிகளுக்கு ரூ. 74,161 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஸ்தபா கமால்பாட்ஷா, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் செல்வபெருமாள், வேளாண்மை உதவி இயக்குநர் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai