சுடச்சுட

  

  கிராமத்தில் அடிப்படை வசதிகள் கோரி தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்

  By அரியலூர்  |   Published on : 25th November 2014 03:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் அருகே மண்ணுழி கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி, தேமுதிக சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  அரியலூர் மாவட்ட தேமுதிக செயலாளர் இராம. ஜெயவேல் தலைமையில் மண்ணுழி பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மண்ணுழி காலனி தெருவில் இருந்து மயானம் வரை சாலை வசதி செய்ய வேண்டும், மயானத்துக்கு இடமும், அதில் கொட்டகையும் அமைக்க வேண்டும், அனைத்து சாலைகளிலும் குடிநீர் வசதி செய்ய வேண்டும், காலனி தெருவில் பாதியில் நிற்கும் கால்வாய், சாலை பராமரிப்புப் பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும், குடிநீர்த் தொட்டியை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

  ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய விவசாய அணிச் செயலாளர் செல்வம், ஒன்றியச் செயலாளர் செல்வராஜ், ஒன்றிய மகளிர் அணிச் செயலாளர் செல்வராணி, மாவட்ட துணைச் செயலாளர் ஜான்கென்னடி, மாவட்ட இளைஞரணிச் செயலாளர் தாமஸ் ஏசுதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai