சுடச்சுட

  

  அரியலூர் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

  அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலத்தை அடுத்த பெரியதிருக்கோணம் கிராமத்தில் புகழ் பெற்ற அய்யனார், கருப்பசாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் குடமுழுக்கு விழா கடந்த ஆண்டு நடைபெற்றது.

  இந்த நிலையில், இந்தக் கோயிலின் 3 உண்டியல்களை ஞாயிற்றுக்கிழமை இரவு மர்ம நபர்கள் உடைத்து, அதிலிருந்த காணிக்கை பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

  இதுகுறித்த புகாரின் பேரில், விக்கிரமங்கலம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai