சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு நேரிட்ட தீ விபத்தில் விவசாயி வீடு எரிந்து சாம்பலானது.

    திருமானூர் அருகே உள்ள வடுகபாளையம் கிராமம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் சிவகுமார், விவசாயி. ஞாயிற்றுக்கிழமை இவரது வீட்டில் யாரும் இல்லாதபோது வீடு தீப்பிடித்து எரிந்தது. இதில் வீட்டிலிருந்த ரூ. 1.45 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த சட்டப்பேரவை உறுப்பினர் துரை. மணிவேல், பாதிக்கப்பட்ட சிவகுமார் குடும்பத்துக்கு அரசு சார்பில் வழங்கப்படும் ரூ. 5 ஆயிரம், வேட்டி, சேலைகளை வழங்கினார். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. திருமானூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai