சுடச்சுட

  

  அரியலூர் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, துப்புரவுத் தொழிலாளர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  அரியலூர் நகராட்சி சுகாதார தொழிலாளர் ஏஐடியுசி சங்கம் சார்பில், பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டப் பொதுச் செயலாளர் டி. தண்டபாணி தலைமை வகித்தார். அரியலூர் நகராட்சியில் மக்கள்தொகைக்கேற்ப துப்புரவுப் பணியாளர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும். துப்புரவு பணி செய்யும் பெண் தொழிலாளர்களுக்கு கூலியை உயர்த்த வேண்டும். அரசு விடுமுறை நாளன்று துப்புரவுப் பணி செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தக் கூடாது. பணியின் போது உயிரிழந்த துப்புரவுப் பணியாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

  கூட்டத்தில், ஏஐடியுசி உள்ளாட்சித் துறை மாநிலப் பொதுச் செயலாளர் சி.டி. சேதுராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இரா. உலகநாதன், மாவட்டத் தலைவர் ஆர். தனசிங், அரியலூர் பகுதி குழுச் செயலாளர் க. கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai