சுடச்சுட

  

  அரியலூர் அருகே உள்ள மண்டையங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (31), எலக்ட்ரீசியன். இவர் திங்கள்கிழமை தனது இரு சக்கர வாகனத்தில் வெங்கடகிருஷ்ணாபுரம் அருகே சென்ற போது லாரியை முந்தி இடதுபுறமாகச் சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சுண்ணாம்புக்கல் லாரியில் மோதியதில் குமார் அதே இடத்தில் உயிரிழந்தார்.

  இதையறிந்த கிராம மக்கள், பிரதான சாலைக்கு வந்து விபத்துக்கு காரணமான லாரியின் கண்ணாடியை அடித்து உடைத்ததோடு, அரியலூர்- ஜயங்கொண்டம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். கயர்லாபாத் காவல் நிலையத்தினர் அங்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து சாலை மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது. மறியலால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai