சுடச்சுட

  

  பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 477 மனுக்கள் பெறப்பட்டன.

  கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அளித்து, குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.

  மேலும், தாட்கோ மூலம் இளைஞர் சுய வேலைவாய்ப்புத் திட்டத்தில் தனிநபர் வாகன கடனாக அயன்பேரையூரைச் சேர்ந்த அரவிந்தராஜுக்கு ரூ. 8,85,890 மதிப்பிலான வாகனத்தை வழங்கினார். கூட்டத்தில், நலத்திட்ட உதவிகள், இலவச வீட்டுமனைப் பட்டா, குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 477 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலர் வி. ராஜன்துரை, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் முருகேஸ்வரி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

  செந்துறையில் இன்றுசமையல் எரிவாயுநுகர்வோர் குறைதீர் கூட்டம்

  செந்துறையில் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை (நவ. 25) நடைபெறுகிறது.

  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

  அரியலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நவ. 25 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது.

  இந்தக் கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமையல் எரிவாயு முகவர்கள் பங்கேற்க உள்ளனர். சமையல் எரிவாயு நுகர்வோர் அது தொடர்பான குறைகள் ஏதாவது இருப்பின், இந்த குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று தங்களது புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்து பயனடையலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai