சுடச்சுட

  

  "ராஜதந்திரத்தால் ராஜபட்சவை அதிபர் பதவியில் இருந்து இந்தியா நீக்க வேண்டும்'

  By அரியலூர்,  |   Published on : 25th November 2014 03:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இலங்கை அதிபர் தேர்தலில் இந்திய அரசு ராஜதந்திர நடவடிக்கை மூலம் ராஜபட்சவை அதிபர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றார் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன்.

  அரியலூரில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:

  2ஜி வழக்கில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில் தீர்ப்பு வெளிவந்து உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்.

  காமராஜர் குறித்து அவதூறாக பேசும் காங்கிரஸ் தொண்டர்கள், நிர்வாகிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

  இலங்கையில் ராஜபட்ச அதிபராக இருக்கும்வரை தமிழர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது. நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் அவரை தோற்கடிக்க இந்திய அரசு ராஜதந்திர முறையை கடைப்பிடிக்க வேண்டும்.

  மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது, இலங்கையில் தமிழர்களுக்காக பல ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. அதில் தற்போது சிங்களர்களை குடியேற்றி வருகிறார்கள்.

  கருணாநிதி சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டும் என்று கோருவது எந்த வகையிலும் நடக்கப் போவதில்லை.

  அதிமுக அரசு முல்லைப்பெரியாறு, காவிரி போன்ற எந்தப் பிரச்னையிலும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியது இல்லை. அவ்வாறு இருக்கையில், சட்டப்பேரவையை கருணாநிதி கேட்டு கூட்டவா போகிறார்கள்.

  முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மக்கள் பிரச்னைகள் குறித்து சிந்திக்க வேண்டும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai