சுடச்சுட

  

  அரியலூரில் விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

  By DN  |   Published on : 26th November 2014 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்காததால் அரியலூரில் அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.

  அரியலூர் ராஜீவ்நகரைச் சேர்ந்தவர் மணிவண்ணன்(38), இவர் கடந்த 22-4-2010 ல் அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு மீண்டும் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, பின்னால் அரசுப் பேருந்து மணிவண்ணனின் மீது மோதியதில் அவர் தனது 2 கால்களையும் இழந்தார்.

  இது குறித்து மணிவண்ணன் தனக்கு விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று அரியலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி உத்திராபதி கடந்த 2012 ஆம் ஆண்டு மணிவண்ணனுக்கு நஷ்ட ஈட்டுத் தொகை ரூ.13 லட்சத்து 80 ஆயிரத்து 265 வழங்க உத்தரவிட்டார். ஆனால் அரசுப் போக்குவரத்துக் கழகம் இந்தத் தொகையை வழங்கவில்லை.

  இதைத் தொடர்ந்து மணிவண்ணன் மீண்டும் அரியலூர் நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தார், மனுவை விசாரித்த முதன்மை நீதிபதி கிருஷ்ணவள்ளி அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். நீதிமன்ற ஊழியர்கள் அரியலூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பேருந்தை ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்துக்கு கொண்டு சென்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai