சுடச்சுட

  

  அரியலூர் மாவட்டத்தில் ரூ.5.37 கோடி மகப்பேறு நிதிஉதவி ஆட்சியர் தகவல்

  By DN  |   Published on : 26th November 2014 12:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் மாவட்டத்தில் மகப்பேறு நிதயுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 5683 பெண்களுக்கு ரூ.37 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் எ.சரவணவேல்ராஜ்.

   அரியலூர் மாவட்டம், பொய்யாதநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற தமிழக முதல் அமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாமினை குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்து நோயாளிகளுக்கான குறிப்பேடுகளை வழங்கியும், மருத்துவமுகாமினை

  பார்வையிட்டும் பேசிய அவர் மேலும் கூறியது, தமிழகமுதல் அமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாமில் பொதுமருத்துவம்,குழந்தைகள் நலம், இருதய நோய், மன நோய் மகளிர் நலம், சித்தமருத்துவம்,கண்நோய், அறுவை சிகிச்சை, எலும்பு மருத்துவம், காது, மூக்கு,தொண்டை மருத்துவம், தோல்நோய், மகப்பேறு பிரிவு போன்ற அனைத்து நோய்களுக்கும்  பரிசோதனையும்,சிகிச்சையும் வழங்கப்படுகிறது.

  இம்முகாமில் அரசு சிறப்பு மருத்துவர்களும், அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவ குழுவினரும் பங்கேற்கின்றனர். வட்டாரத்துக்கு மூன்று முகாம்கள் வீதம் நடைபெறவுள்ள 18 முகாம்கள் தொடக்க முகாமாக இம்முகாம் நடைபெறுகிறது. இம்முகாம்களில்

  ஸ்கேன், ஈசிஜி,கர்ப்பப்பை மற்றும் மார்பகப் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளும், மற்றும் அனைத்து ரத்தப் பரிசோதனைகளும், செய்யப்படுகின்றது. தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு தகுதியுடைய பயனாளிகள் கண்டறியப்பட்டு

  மேல்சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுவார்கள். 2013-14 ஆம் ஆண்டில் வட்டாரத்துக்கு ஒன்று வீதம் அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற 6 சிகிச்சை மருத்துவ முகாம்களில் 6560 பேர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர்.

  2014-15 ஆம் ஆண்டில் டாக்டர் முத்துலெட்சுமிரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்துக்கு ரூ.7 கோடியே 90 லட்சத்து 4 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 5683 தாய்மார்களுக்கு ரூ.5 கோடியே 37 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

   680 பெண்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ரூ.4 லட்சத்து 8 ஆயிரம் ஊக்கத்தொகையும், நவீன ஆண் கருத்தடை சிகிச்சை செய்து கொண்ட 19 ஆண்களுக்கு ரூ.20 ஆயிரத்து 900 மதிப்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

  மேலும், வாகன வசதியுள்ல ஆரம்ப சுகாதார நிலைத்தில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களை பிரசவத்துக்கு அழைத்துவரவும்,பிரசவத்துக்கு பின்பு வீட்டுக்கு திரும்புவதற்கும் வாகன வசதி செய்து தரப்படுகிறது.

  யானைக்கால் நோயாளிகளுக்கு மாதம் ரூ.400 உதவித் தொகை வழங்கப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வளர் இளம் பெண்களுக்கு ரத்தசோகை நோய் தடுக்க வியாழன்தோறும் இரும்பு சத்து மாத்திரைகளும், 3 மாதங்களுக்கு தேவையான சானிடரி

  நாப்கின்கள் வழங்கப்படுகிறது. நடமாடும் மருத்துவக்குழு வட்டாரத்துக்கு ஒன்று வீதம் 6 நடமாடும் மருத்துவக்குழுக்கள் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் நடமாடும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது என்றார் அவர்.

  இந்நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் ஆ.மோகன், இணை இயக்குநர் ஜி.சிவகுமார், வட்டார மருத்துவ அலுவலர் இரா.கஸ்தூரிபாய், ஒன்றியக்குழு உறுப்பினர் சந்திரசேகர், ஊராட்சி மன்றத் தலைவர் தங்கவேல், அரசு மருத்துவர்கள்,செவிலியர்கள்,

  சுகாதாரப்பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai