சுடச்சுட

  

  கூரியர் நிறுவனம் நடத்துவதாக கூறி அரியலூர் இளைஞரிடம் ரூ.62 ஆயிரம் மோசடி: சென்னையைச் சேர்ந்த 2 பேர் மீது வழக்கு

  By DN  |   Published on : 26th November 2014 12:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கூரியர் நிறுவனம் நடத்துவதாகக் கூறி அரியலூர் இளைஞரிடம் ரூ.62 ஆயிரம் மோசடி செய்ததாக சென்னையைச் சேர்ந்த 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலத்தைச் சேர்ந்தவர் ரவிகுமார்(32)வியாபாரி. கடந்த 2013 ஆம் ஆண்டு சென்னையில் கூரியர்  மற்றும் ஏற்றுமதி நிறுவனம் நடத்தப்போவதாகவும், அதற்கு மாவட்ட வாரியாக முகவர்கள் தேவை என்று பத்திரிகையில் வந்த விளம்பரத்தைப் பார்த்து ரவிகுமார் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரவிகுமாரிடம், சென்னையைச் சேர்ந்த அன்வர், மற்றும் சுவேதா (எ) ரூபவர்த்தின் ஆகியோர் முதலில் ரூ.5 ஆயிரம் வைப்புத் தொகை செலுத்துமாறு கூறினார். பின்னர் தொடர்ந்து அவர்கள் ஒரு வங்கி கணக்கில் ரூ.57 ஆயிரத்தை செலுத்தும்படியும் கூறினர். இதைத் தொடர்ந்த ரவிகுமார் ரூ. 62 ஆயிரத்தை அனுப்பினார். ஆனால் கூரியர் நிறுவனம் தொடபர்பாக அவருக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை.மேலும் அவர் சென்னை சென்று விசாரித்ததில் சம்பந்தப்பட்ட முகவரியில் கூரியர் நிறுவனம் ஏதும் இல்லை என்பது தெரிய வந்தது.

  இந்நிலையில் ரவிகுமார் அரியலூர் மாவட்டக் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார், உதவி ஆய்வாளர் ஜெயமோகன் வழக்குப் பதிந்து சென்னையைச் சேர்ந்த அன்வர், மற்றும் சுவேதாவை தேடி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai