சுடச்சுட

  

  திருமானூர் அருகே அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்த 4 பேர் கைது

  By DN  |   Published on : 26th November 2014 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருமானூர் அருகே அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்த 4 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

  அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள புதுக்கோட்டை மற்றும், திருமழபாடி பகுதிகளில் திருமானூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சதீஸ்குமார் மற்றும் போலீஸார் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, கண்டிராதீர்த்தம்  பகுதியில் 4 இளைஞர்கள்  நாட்டுத்துப்பாக்கி வைத்துக் கொண்டு வேட்டையாடியது தெரிய வந்தது.  போலீஸார் அந்த 4 பேரையும் பிடித்து விசாரித்ததில் அவர்கள் புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த வின்சென்ட்ராஜா(21), சிம்ஜோன்(20), கில்பர்ட்ஜென்மராஜ்(35), மற்றும், குலமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜோயல் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 2 நாட்டுத்துப்பாக்கிகள், 3 ஏர்கன் துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் விசாரித்ததில் நரிக்குறவர்களிடமிருந்து துப்பாக்கி வாங்கியதாக தெரிவித்தனர்.

  கைது செய்யப்பட்ட 4 பேரும் அரியலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai